தமாகா சின்னம் தொடர்பான வழக்கு : விசாரணை டிச.16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தமாகா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமாகா சின்னம் தொடர்பான வழக்கு : விசாரணை டிச.16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
உள்ளாட்சி தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தமாகா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  ஏற்கனவே சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரி  தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருப்பதால் அதனுடன் இணைத்து விசாரிக்க வேண்டுமென வாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல்  சின்னம் கோரிய வழக்கை,  சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரிய வழக்குடன் இணைத்து பட்டியலிட நீதிபதி  பரிந்துரைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்