"வென்றாலும் வரலாறு தோற்றாலும் வரலாறு" - சத்சங்கம் நிகழ்ச்சியில் கலகலப்பூட்டிய நித்தி

வென்றாலும் வரலாறு தோற்றாலும் வரலாறு என்பதால் ஞானப்போரில் உடனே இறங்குங்கள் என சத்ச​ங்கம் நிகழ்ச்சியில் நித்தி பேசியிருப்பது வேற லெவல் பிரசங்கம்...
வென்றாலும் வரலாறு தோற்றாலும் வரலாறு - சத்சங்கம் நிகழ்ச்சியில் கலகலப்பூட்டிய நித்தி
x
நித்தி எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து வரும் 18ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. தன் மகள்களை கடத்தி வைத்திருக்கிறார் நித்தி என ஜனார்த்தன ஷர்மா கிளப்பிய பிரச்சினை பூதாகரமாக உருமாறிய நிலையில் தங்கள் தந்தையால் ஆபத்துகள் அதிகம் இருப்பதாக மகள்களே எதிர்வினையாற்றியிருப்பது சர்ச்சையின் உச்சம்.சத்சங்கம் நிகழ்ச்சிக்கு ஜடையை ஸ்டைலாக கழுத்தை சுற்றி போட்டபடி வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தினார் நித்தி. தன்னுடைய ஞானக்கண்ணால் எல்லாம் செய்வேன் என கூறிய நித்தி, தினம் தினம் சாப்பிடும் சாதத்தை கூட எத்தனை இருக்கிறது என எண்ணி எண்ணி தான் சாப்பிடுவேன் என கூறி பட்டையை கிளப்பி இருக்கிறார். 

வென்றாலும் வரலாறு... தோற்றாலும் வரலாறு... என சொல்லியிருக்கும் நித்தி, தன் சிஷ்யர்களை போரில் இறங்க தயாராக இருங்கள் எனவும் உத்தரவிட்டு இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தன் பணி என்ன என்பதை சத்சங்கத்தில் விளக்கிய நித்தி எதைக் கண்டும் கலங்க வேண்டாம் வெற்றி நமதே என கலகலப்பூட்டி இருக்கிறார். பரமசிவன், காலபைரவன், மீனாட்சி என தெய்வங்களை பற்றி சத்சங்கத்தில் பேசிய நித்தி, முருகப்பெருமானோடு தன்னை ஒப்பிட்டு பேசியதெல்லாம் இதுவரை வரலாறு காணாத பேச்சு. போகன்வில் நாட்டை உருவாக்க 10 ஆண்டுகள் போர் நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் நித்தியின் கைலாசா நாட்டுக்கு போர் நடக்குமா? இல்லை அக்கப் போராகவே முடிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.. 

Next Story

மேலும் செய்திகள்