"தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில், விலைவாசி கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
x
தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.  மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தூர் வாரப்பட்டு, வைகை ஆற்றிலிருந்து நீர் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ இந்தியாவில் சிறந்த மாநிலமாக  தமிழகம் உள்ளது என குறிப்பிட்டார்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறி விட்டது என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன என்றும் கேள்வி எழுப்பினார். வெளிநாட்டு வெங்காயத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்