குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் : ஐ.பி. முகவரி குறித்து ரகசிய விசாரணை

குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்வு குறித்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் வெவ்வேறு ஐபி அட்ரஸ்களை கண்டறிந்து காவல்துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் : ஐ.பி. முகவரி குறித்து ரகசிய விசாரணை
x
குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சியில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த நபரின் செல்போனை ஆய்வு செய்ததில், பல ஐ.பி முகவரிகள் கண்டறியப்பட்டு 2ஆவது பட்டியலை காவல்துறை தயாரித்துள்ளது. இந்த பட்டியல் சென்னை, செங்கல்பட்டு ,கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நான்கு மாவட்ட காவல்துறைக்கு அனுப்பப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகசிய விசாரணையில் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் சிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி சிக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்