உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை : முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை : முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு
x
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதுபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர்கள் பழனிசாமி, வீரபாண்டியன் ஆகியோரும் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்