தமிழகம், கேரளா நதிநீர் பிரச்சினை - இரு மாநில குழுக்கள் இன்று பேச்சுவார்த்தை

தமிழகம் கேரளா இடையே நதிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இரு மாநில குழுக்கள் சென்னையில் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
தமிழகம், கேரளா நதிநீர் பிரச்சினை - இரு மாநில குழுக்கள் இன்று பேச்சுவார்த்தை
x
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி, கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது இருமாநில நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்த இரு மாநில செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பரம்பிகுளம்- ஆழியாறு திட்டம் குறித்த குழு பாண்டியாறு-புன்னபுழா திட்டத்திற்கான குழுவினரும், இதேபோல் கேரள அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு சென்னையில் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.


Next Story

மேலும் செய்திகள்