எஸ்.ஐ. வேலை வாங்கித் தருவதாக மோசடி : ஓய்வு பெற்ற காவலர் கைது

சென்னையில், காவல் உதவி ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஐ. வேலை வாங்கித் தருவதாக மோசடி : ஓய்வு பெற்ற காவலர் கைது
x
சென்னையில், காவல் உதவி ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார். வேளச்சேரியை சேர்ந்தவர், பட்டதாரி இளைஞர்  கார்த்திக் என்பவரிடம், காவல் உதவி ஆய்வாளர், வேலை வாங்கி தருவதாக, ஓய்வு பெற்ற காவலர்கள், இளந்தமிழன், மோகன் ஆகியோர் கூறியுள்ளனர். இதை நம்பி, 4 லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்துள்ளார். அவர்கள் கூறியது போல், வேலை வாங்கி தராததால் சந்தேகமடைந்த கார்த்திக், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து,  மோகனை போலாசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்