ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.2.75 லட்சம் பணம்

நாமக்கல் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 லட்சத்து 75 ரூபாய் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.2.75 லட்சம் பணம்
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பெரமாண்டம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு பெண்கள் பொதுப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டதாகவும், அதில் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு நொச்சிப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் ஏலம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அரசு அதிகாரிகள் பெரமாண்டபாளையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் எடுத்த சம்பவத்தால் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்