நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரி : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரி : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
x
மாநில அரசுகளின் பங்களிப்புடன், 75 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைய  உள்ளது. இதற்காக, நாகை அருகே, ஒரத்தூர் கிராமத்தில் 21 புள்ளி 66 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில்  அமைக்க கோரி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்