சேலம்: பேருந்தில் இருந்து ரூ. 1 கோடி கொள்ளை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
சேலம்: பேருந்தில் இருந்து ரூ. 1 கோடி கொள்ளை
x
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் இருந்து தங்க நகைகளை விற்பனை செய்த பணத்துடன் கோவைக்கு ஆரஞ்சு டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் தொழிலதிபர் ஹரிஷ் என்பவர் பயணம் செய்தார். வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே பேருந்து நிறுத்தப்பட்ட போது ஹரிஷ் வைத்திருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.  கொள்ளையர்களை பிடிக்க சங்ககிரி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்