மதுரையில் அம்மா திருமண மண்டபம் திறப்பு

மதுரையில் அம்மா திருமண மண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
மதுரையில் அம்மா திருமண மண்டபம் திறப்பு
x
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை, மதுரையில்,  கட்டப்பட்ட வீடுகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மகாகவி பாரதியார் நகரில், 129 கோடி ரூபாய் மதிப்பில் குறைந்த வருவாய் பிரிவினருக்கு  510 வீடுகளையும்,  முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர் வருவாய் பிரிவினருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பில்  40 வீடுகளையும் திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகரில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில்  கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.



Next Story

மேலும் செய்திகள்