விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு - வைகை அணையில் நீர்மட்டம் சரியும் அபாயம்

வைகையில் அணையில் வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு - வைகை அணையில் நீர்மட்டம் சரியும் அபாயம்
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகையில் அணையில், வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டிய நிலையில், வினாடிக்கு இரண்டாயிரத்து140 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாளை முதல் விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக சரிந்தால், 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்