தேனி : மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில், அறுவடையை நெருங்கிய நெல் கதிர்கள் அனைத்தும் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேனி : மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
x
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில், அறுவடையை நெருங்கிய நெல் கதிர்கள் அனைத்தும் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் முல்லை பெரியாறில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கம்பம்,  சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அறுவடை நெருங்கிய நிலையில், பயிர் அனைத்தும் தரையோடு சாய்ந்துவிட்டன. மழை நீரும் தேங்கி உள்ளதால், அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஜூன் மாதமே தண்ணீர் கொடுத்திருந்ததால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என கூறும் விவசாயிகள், அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்