சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நித்தி - கைலாசா வலைதளத்தை ஆர்வமாக தேடும் மக்கள்

கைலாசா பற்றிய பேச்சு ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக ஆசிரமத்தில் இருக்கிறோம் என ஜனார்த்தன ஷர்மாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நித்தி - கைலாசா வலைதளத்தை ஆர்வமாக தேடும் மக்கள்
x
தன்னுடைய மகள்கள் 2 பேரை நித்தி தன் கட்டுப்பாட்டில் வெளிநாட்டில் அடைத்து வைத்திருக்கிறார் என ஜனார்த்தன ஷர்மா அளித்த புகாரே இந்த பிரச்சினைக்கெல்லாம் அடித்தளம். அதன்பிறகு தான் அடுத்தடுத்த புகார்கள் நித்தி மீது வந்து சேர்ந்தது. ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துதெரிவித்திருந்த 2 பெண்களும் தன் தந்தை பொய்யான அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்து இருந்தனர். 

இது ஒரு புறம் இருக்க ஆன்லைனில் சத்சங்கம் நிகழ்ச்சியில் ஆஜரான நித்தியும் அவ்வப்போது தன் மீதான புகார்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். ஈக்வெடார் நாட்டில் தன் மகள்களை  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் நித்தி என்ற ஜனார்த்தன ஷர்மாவின் புகாருக்கு இதுவரை நித்தி வாய் திறக்கவில்லை. 

இந்த சூழலில் ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் தங்கள் கருத்துகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். நித்தியானந்தா தங்களுக்கு கடவுளுக்கு நிகரானவர் என கூறும் அவர்கள், மகிழ்ச்சியோடும், முழு விருப்பத்தின் பேரிலும் இங்கிருப்பதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆசிரமத்தில் நள்ளிரவில் பெண்களை எழுப்பி நகை அணிந்து கொண்டு நடனமாட சொன்னதாக ஜனார்த்தன ஷர்மா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அவர் மகள், 3 வருடங்களாக ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்த என் தந்தை இதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்காதது ஏன்? என வினவியிருக்கிறார். 

நித்தியானந்தா வெளிநாட்டுக்கு சென்ற போதெல்லாம் ஆசிரம பொறுப்பாளராக இருந்த தன் தந்தை இங்கு நடந்ததாக சொல்லப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்திருக்கலாமே? என எதிர் கேள்வி கேட்டுள்ளார். தன் தந்தையும் தாயும் தங்களைப் பற்றியும் ஆசிரமத்தை பற்றியும் சொல்வதெல்லாம் பொய் என்றும் பதில் கொடுத்துள்ளனர். 

காதல், ஆண் நண்பர் என டீன் ஏஜ் பெண்களுக்கு உரிய எந்த பிரச்சினையும் தங்களுக்கு இல்லை என்றும் மன நிறைவோடு ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினையை பொதுவெளியில் கொண்டு சென்று ஆதாயம் தேட முயற்சிக்கும் தன் தந்தை ஆபத்தான ஒரு நபர் என மகளே கூறுவது அதிர்ச்சியின் உச்சம் தான். 

இது ஒரு பக்கம் இருக்க நித்தியானந்தாவின் வலைதள பக்கங்கள் எல்லாமே டிரெண்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. கைலாசா பக்கத்தை ஆர்வமாக தேடும் மக்கள் அதனை சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். 

கைலாசா தொடர்பான மீம்ஸ்களும், அங்கு குடியேற என்ன வழி? கைலாசாவில் வெங்காயம் என்ன விலை? என சரமாரி கேள்விகள் கேட்டு கலகலப்பூட்டி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்