"உதவி கோரி வரும் அழைப்புகள் மீது நடவடிக்கை எடுங்கள்" - டி.ஜி.பி திரிபாதி

தமிழ் வளர்ச்சி செயலாக்க திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் டி.ஜி.பி திரிபாதி முதன் முறையாக தமிழில் கையெழுத்திட்டு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உதவி கோரி வரும் அழைப்புகள் மீது நடவடிக்கை எடுங்கள் - டி.ஜி.பி திரிபாதி
x
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின்  எதிரொலியாக, டிஜிபி இந்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,  உதவி கோரி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உண்மை தன்மையை ஆராய்ந்து,  காலம் தாழ்த்தாமல் காவலர்கள் சம்பவ இடத்திற்கு  உடனடியாக செல்லவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். காவலன் செயலியை பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். காவல் சரகம் எல்லைகள் மற்றும் நடைமுறை சிக்கலை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்காமல் இருக்க கூடாது என கூறியுள்ளார்.  இது போன்ற புகாரில் நடவடிக்கை எடுக்க தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்