குன்னூர்: தொடர் மழையால் புதிதாக 50 நீர் வீழ்ச்சிகள்

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறை விழுந்த நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர்: தொடர் மழையால் புதிதாக 50 நீர் வீழ்ச்சிகள்
x
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறை விழுந்த நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறை ஒன்று சாலையின் நடுவே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான பாறைகள் விழுந்துள்ளதால் அவற்றை தொடர்ந்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதோடு வாகனங்களும் திருப்பி விடப்பட்டுள்ளன. அதேநேரம் தொடர் மழை காரணமாக  நீலகிரி மலையில் புதிதாக 50க்கும் மேற்ப்பட்ட இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. இதை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்