திருச்செந்தூர்: குடியிருப்பை சூழ்ந்துள்ள மார்பளவு மழை நீர்

திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை பகுதியில் உள்ள சுனாமி நகர் பகுதியில் மார்பளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர்: குடியிருப்பை சூழ்ந்துள்ள மார்பளவு மழை நீர்
x
திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை பகுதியில் உள்ள சுனாமி நகர் பகுதியில் மார்பளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால் பெரும் அவதி அடைந்துள்ளனர். அப்பகுதியில் கனமழை சூழ்ந்துள்ள நிலையில் ஆபத்தான பாம்பு, பூரான் போன்றவை வீடுகளில் நுழையும் என்பதால் உயிர் பயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதாக கூறும் சுனாமி நகர் மக்கள் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டினர். மக்களை திரட்டி போராட உள்ளதாக கூறும் அவர்களின் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலையிலும் பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமலும் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்