தூத்துக்குடி : மழை நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார் கனிமொழி

தூத்துக்குடியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அத்தொகுதி எம்.பி. கனிமொழி நேரில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி : மழை நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார் கனிமொழி
x
தூத்துக்குடியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அத்தொகுதி எம்.பி. கனிமொழி  நேரில் பார்வையிட்டார். எழில் நகர், குறிஞ்சி நகர், லூர்தம்மாள்புரம், மரைக்காயர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் பாதிக்கப்படவர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரை சந்தித்த கனிமொழி மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அகற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி  திமுக ஆட்சியில் தூத்துக்குடியில்  கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தாலே மழை வெள்ள பாதிப்பு இருக்காது என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்