காவலர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய ரவுடி

சென்னை மணலியில் இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி ஒருவர், ​காவலரையும் அவரின் உறவினரையும் தாக்கியுள்ளார்.
காவலர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய ரவுடி
x
செங்குன்றம் காவல் நிலையத்தில்  தலைமை காவலராக பணிபுரிந்து வரும் முத்துக்குமார் தனது குடும்பத்துடன்  காரில் சென்றார். அப்போது மணலி பகுதியில் போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கொடுங்கையூரை சேர்ந்த வீரபத்திரன் என்ற ரவுடி, காவலர் முத்துக்குமாரின் கார் மீது மோதினார். இதில் காரின் இடது பக்க கதவு சேதம் அடைந்தது. இதனை தலைமை காவலர் முத்துக்குமார் தட்டி கேட்கவே இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கையால் தாக்கி கொண்டனர். மேலும் ரவுடி வீரபத்திரன் செல்போன் மூலம் தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 5 பேர்  காவலர் முத்துக்குமார் மற்றும் அவரின் சகோதரி காந்தி ஆகியோரை கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காவலர் முத்துக்குமாரின் சகோதரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த முத்துக்குமாரையும், காந்தியையும் மருத்துவமனையில் சேர்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்