கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்கள் பத்திரமாக மீட்பு

கும்பகோணம் அருகே கொத்தங்குடி கொள்ளிடம் ஆற்று வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்ட இருவர் மீட்கப்பட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்கள் பத்திரமாக மீட்பு
x
கும்பகோணம் அருகே கொத்தங்குடி கொள்ளிடம் ஆற்று வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்ட இருவர் மீட்கப்பட்டனர். ஆற்றின் மணல் திட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாண்டியன் மற்றும் முருகன் வெள்ளத்தில் சிக்கினர். பின்னர், திட்டில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, படகு மூலம் மீட்டனர். இந்நிலையில், யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்