சென்னையில் கனமழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னையில் கனமழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்
x
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக  பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால் மூவாயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 938 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. மூவாயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது ஆயிரத்து 604 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 94 மில்லியன் கன அடியாக உள்ளது. மூவாயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு தற்போது  843 மில்லியன் கன அடியாக இருக்கிறது. 4 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு மூவாயிரத்து 285 மில்லியன் கன அடியாக உள்ளது என தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த ஆவடி பருத்திபட்டு ஏரி, 
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரியும் நிரம்பி வருகின்றன செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் 18 அடியை எட்டியது.  ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஏரியில் 384 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்