மீட்பு, நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பருவமழை முன்னேற்பாடு மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
மீட்பு, நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்
x
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக  ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மழை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை நடைபெறுகிறது. அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் வெள்ள சேத பாதிப்பு, மீட்பு, நிவாரணம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்