தேனியில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது

தேனியில் வீட்டின் குளியலறையில் செல்போனை மறைத்து வைத்து பெண் குளிப்பதை படம் பிடித்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தேனியில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது
x
தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி  சுரேஷ். அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் சென்ற அவர், குளியலறைக்குள் தனது செல்போனை படம்பிடிக்கும் வகையில் மறைத்து வைத்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் குளியலறையில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போன் சுரேஷ்க்கு சொந்தமானது என்று தெரியவந்ததையடுத்து, அது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது சுரேஷ், அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து புகாரின் பேரில் சுரேஷை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் பல வீடுகளின் குளியலறைகளில் இதுபோல  செல்போன்களை மறைத்து வைத்து படம் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்