நெல்லையில் விடிய, விடிய பெய்த கன மழை : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்

நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாந்திநகரில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
நெல்லையில் விடிய, விடிய பெய்த கன மழை : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்
x
சனிக்கிழமை பிற்பகல் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கே.டி.சி. நகர், சமாதானபுரம், உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கால்வாய் தூர்வாரப்படாததால், கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.  தண்ணீரை அகற்றக் கோரி புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாளையங்கோட்டை - தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டம் செய்ய முயற்சித்தனர். தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஆணையர் கண்ணன், தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்