வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 6 ஆயிரம் பேர் தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்ட மீட்பாளர்கள் 6 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 6 ஆயிரம் பேர் தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்
x
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை சிந்துபூந்துரையில் உள்ள எஸ்.டி.சி பள்ளி முகாமை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் 15 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  
நெல்லை தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 20 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் ஷில்பாபிராபகர் சதீஷ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்