திருநங்கைகளுக்காக புதிய செயலி அறிமுகம் - சமூக நலத்துறை செயலாளர் மதுமதி தகவல்

திருநங்கைகளுக்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை செயலாளர் மதுமதி தெரிவித்தார்.
திருநங்கைகளுக்காக புதிய செயலி அறிமுகம் - சமூக நலத்துறை செயலாளர் மதுமதி தகவல்
x
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் வீதி நாடகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சமூக நலத்துறை செயலாளர் மதுமதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநங்கைகள் பயன்பெறும் வகையில் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அரசு உதவி பெறும் வகையில் திருநங்கைகளுக்கு அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்