போலி ரசீதுகள் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு : ஒருவர் கைது, இருவரை தேடும் பணி தீவிரம்

தமிழகத்தில் 3 நாட்களாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறை புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையில் போலி ரசீதுகள் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ரசீதுகள் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு : ஒருவர் கைது, இருவரை தேடும் பணி தீவிரம்
x
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய சரக்கு மற்றும் சேவை துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். போலி நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் போலியான ரசீதுகளை வைத்து பெரும் அளவில் மோசடி செய்தது இதில் தெரியவந்தது. இதுதொடர்பாக சரக்கு மற்றும் சேவை துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகளின் மதிப்பு மட்டுமே சுமார் 420 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரசீதுகளை பயன்படுத்தி சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளீட்டு வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்