யானைகளுக்கான புத்துணர்வு முகாம் - ஏற்பாடுகள் தீவிரம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வழக்கமாக முகாம் நடைபெறும் பவானியாற்று கரையோரப்பகுதியானது, சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தாண்டு 30க்கும் மேற்பட்ட யானைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவற்றை கட்டி வைக்கப்படும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் யானைகள் படுத்தபடி குளிக்க தரைதளம் மற்றும் ஷவர்கள் அமைக்கும் பணியும் துவங்க உள்ளது.
Next Story

