பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142 புள்ளி 05 அடியாக உயர்ந்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி  இரண்டாயிரத்து 750 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தாமிரபரணி நதியில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாமிரபரணி நதியில் அதிகளவில் நீர் வந்துகொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்