ராதாபுரம் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
ராதாபுரம் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் -  டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை
x
அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடைசி 3 சுற்று வாக்குகளையும்  தபால் வாக்குகளையும் மட்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வாக்குகள் எண்ணப்பட்டட நிலையில் அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகின்ற 11 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்ததோடு டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், அப்பாவு மற்றும் இன்பதுரை தரப்பு கூடுதல்  ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளளது.


Next Story

மேலும் செய்திகள்