"காலபைரவர் துணையோடு, தாக்குதல்களை எதிர் கொள்வோம்" - நித்யானந்தா

தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக நித்யானந்தா கூறியுள்ளார்.
x
உலக அளவில் ஆசிரமம் வைத்து நடத்திவரும் நித்தியானந்தா மீது பெண்களை அடைத்து வைத்தல், சொத்துக்களை அபகரித்தல் என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் வன்முறை வேண்டாம், சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார். தாம் அங்கே இல்லாத நேரத்தில் எதிரிகள் தம்மைப் பற்றி தவறாக கட்டமைப்பதாகவும், பொய்யாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அதுவாக மறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காலபைரவர் துணையோடு, இந்த தாக்குதல்களை எதிர் கொள்வோம் என்று நித்தியானந்தா கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்