ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாணவர்கள் சாதனை - பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்த ஆட்சியர்

சிவகங்கையில் உலக சாதனைகளை முறியடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாணவர்கள் சாதனை - பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்த ஆட்சியர்
x
சிவகங்கையில் உலக சாதனைகளை முறியடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். 11 வயது சிறுவன் பிரணவ் குமார் ஜம்பிங்ஜேப்ஸ் எனப்படும் குதிக்கும் போட்டியில், ஒரு நிமிடத்தில் 116 முறை குதித்து சாதனை படைத்துள்ளார்.   5 வயது சிறுவன் பிரணித் குமார், சக்கராசனம் என்ற ஆசனத்தை 35 நிமிடம் 45 வினாடிகள் செய்து சாதனை படைத்துள்ளார். இதேபோல, 8 வயது சிறுவன் ராகவ் ஐயனாரும் சக்கராசனத்தை 31 நிமிடங்கள்  செய்து காண்பித்து அசத்தியுள்ளார். இந்த சாதனைகள் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இந்த சாதனை சிறுவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்