போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில்போலி தங்க கட்டி கொடுத்து 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி
x
கோவை பெரியநாயக்கன்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கணேஷ் மனைவி கவிதா துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி எடுக்க கிருஷ்ணகிரி குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமி அடிக்கடி வந்துள்ளார். இந்நிலையில், தம்மிடம் தங்க கட்டிகள் இருப்பதாகவும், யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் விற்பனை செய்து தர கவிதாவிடம் லட்சுமி கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் நீங்களே வாங்கி கொள்ளுங்கள் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.  கவிதாவும், தங்க கட்டிகளை கொண்டு வர கூறியுள்ளார். அதில் ஒரு சிறு பகுதியை பார்த்த கவிதா, 2 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி  வாங்கியுள்ளார். பின்னர் அதனை நன்றாக சோதித்த போது அது போலி என தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக கவிதா தனது தோழியிடம்  கூறியுள்ளார். இந்நிலையில், மற்றொரு பெண்ணிடம் இது போன்று தங்க கட்டி இருப்பதாக லட்சுமி கூறிய தகவல், கவிதா தோழிக்கு தெரிய வர, அதுகுறித்து கவிதாவுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக கவிதா காரமடைக்கு சென்று பார்த்தபோது, தன்னை ஏமாற்றிய அதே லட்சுமி என தெரியவந்தது. உடனடியாக லட்சுமியை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து லட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்