போலி உயில் தயாரித்த பேரன் மீது புகார் - நடவடிக்கை கோரி, தாத்தா - பாட்டி தீக்குளிப்பு முயற்சி

போலி உயில் தயாரித்து சொத்தை அபகரித்ததாக பேரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாத்தா - பாட்டி இருவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர்.
போலி உயில் தயாரித்த பேரன் மீது புகார் - நடவடிக்கை கோரி, தாத்தா - பாட்டி தீக்குளிப்பு முயற்சி
x
போலி உயில் தயாரித்து சொத்தை அபகரித்ததாக பேரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாத்தா - பாட்டி இருவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினர். பெரிச்சிபாளையம் பகுதியில் வசிக்கும் நாச்சிமுத்து - சரசம்மாள் தம்பதிகளின் சொத்தை அவர்களது பேரன் செல்வராஜ் என்பவர் போலி உயில் தயாரித்து 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது 


Next Story

மேலும் செய்திகள்