கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மேல் வெங்கட சமுத்திரம் பகுதியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மேல் வெங்கட சமுத்திரம் பகுதியில் ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில், முருகன் கோயில் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். உண்டியலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை பணம் மற்றும் சாமி அலங்கார பொருட்கள் வெள்ளி பொருட்கள் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளைபோய் விட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

