புதிதாக உதயமான தென்காசி மாவட்டம்

தமிழகத்தின் 33 வது மாவட்டமாக, இன்று உதயமான இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியின் சிறப்புகள்...
புதிதாக உதயமான தென்காசி மாவட்டம்
x
தமிழக கேரள எல்லை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது தென்காசி, வருடத்தில் 8 மாதங்கள் மிதமான சீதோஷ்ண நிலையைக் கொண்ட இந்த தென்காசி, சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் சுற்றுலா தலமாகும். புகழ்பெற்ற குற்றாலம் இந்த  மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. பெரும்பாலும் இங்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படுவதில்லை. மூன்று போக விளையும் பூமி இந்த தென்காசி. இங்குள்ள, ஆன்மிக தலங்களான  தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், குற்றாலநாதர் கோயில், இலஞ்சி முருகன் கோயில் ஆகியவை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இலத்தூர் சனீஸ்வரன் கோயில், திருமலை கோயில் ஆகியவையும்  அதிக பக்தர்கள் வந்து செல்லும் இடங்களாக இருக்கின்றன. கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்களும் பெருமளவில் வந்து செல்லும் மாவட்டமாக தென்காசி திகழ்கிறது.


Next Story

மேலும் செய்திகள்