ராதாரவி விவகாரம் : "எடுத்த நடவடிக்கை என்ன?" - தொழிற்சங்க பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ராதாரவி விவகாரம் : எடுத்த நடவடிக்கை என்ன? - தொழிற்சங்க பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
x
தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்கவில்லை என கூறி மயிலை குமார், காளிதாஸ் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனிடையே, தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனின் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்