"சமத்துவபுரத்தை பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்" - விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

சமூகநீதிக்கு அடையாளமாக விளங்கும் சமத்துவபுரத்தை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமத்துவபுரத்தை பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை
x
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சமத்துவபுரம் என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 100 வீடுகளைக் கொண்ட சமத்துவபுரத்தில் பட்டியல் இனத்தவருக்கு 45 வீடுகள் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 வீடுகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 வீடுகள் மற்ற சமுதாய மக்களுக்கு மீதமுள்ள 10 வீடுகள் என்கிற அடிப்படையில் சமத்துவபுரத்தை விரிவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்