"முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது" - அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்

முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாக, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்
x
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது  முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து  கேரள மாநில எம்.பி. குரியகோஷ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பருவமழைக்கு முன்பும்  பின்பும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்படுவதாக கூறினார். அதன்படி கடந்த ஜூன் மாதம் நடத்திய, ஆய்வின்படி அணை முழுவதும் பாதுகாப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய  கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்