"உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. உடன் இணைந்து போட்டி" - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தகவல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை இன்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார்
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. உடன் இணைந்து போட்டி - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தகவல்
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை இன்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய வேல்முருகன், உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தலை கொண்டு வரும் தமிழக அரசின் நடவடிக்கையை வாழ்வுரிமைக் கட்சி கண்டிப்பதாக தெரிவித்தார். தோல்வி பயத்தின் காரணமாகவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என அ.தி.மு.க. அரசு அறிவித்து உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். தி.மு.க. வுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எனவும் வேல்முருகன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்