ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்காத‌தால் விரக்தி - தொமுச, சிஐடியூ உள்ளிட்ட பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்காத‌தால் விரக்தி - தொமுச, சிஐடியூ உள்ளிட்ட பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கண்டன கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் சிஐடியூ பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், தொமுச பொருளாளர் நடராஜன் தலைமையில் 9 தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்