தேர்தல் விருப்ப மனு : "ஏற்கனவே மனு பெற்றவர்களுக்கு, பணம் திரும்ப வழங்கப்படும்" - கட்சி தொண்டர்களுக்கு அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

அதிமுக சார்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விருப்ப மனு நாளை காலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விருப்ப மனு : ஏற்கனவே மனு பெற்றவர்களுக்கு, பணம் திரும்ப வழங்கப்படும் - கட்சி தொண்டர்களுக்கு அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு
x
அதிமுக சார்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விருப்ப மனு நாளை காலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், ஆகிய பதவிகளுக்கு விருப்ப மனு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே விருப்ப மனு பெற்றவர்கள், 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தலைமை கழகத்தில், விருப்ப மனு ரசீதை காட்டி அதற்கு செலுத்திய பணத்தை பெற்று கொள்ளலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
Next Story

மேலும் செய்திகள்