"முதலமைச்சருக்கு 'தோல்வி பயம்' ஏற்பட்டு விட்டது" - ஸ்டாலின்
மறைமுகத் தேர்தல்' என்ற அவசரச்சட்டம் முதலமைச்சருக்கு 'தோல்வி பயம்' ஏற்பட்டுவிட்டதை உணர்த்துவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மறைமுகத் தேர்தல்' என்ற அவசரச்சட்டம் முதலமைச்சருக்கு 'தோல்வி பயம்' ஏற்பட்டுவிட்டதை உணர்த்துவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேரடித் தேர்தல் என்றால், அ.தி.மு.க. எந்த ஒரு மேயர் பதவியிலோ, நகராட்சித் தலைவர் பதவியிலோ, பேரூராட்சித் தலைவர் பதவியிலோ வெற்றி பெற முடியாது என்பதை முதலமைச்சர் புரிந்து கொண்டு விட்டார் எனவும் தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் படுதோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதைத்தான் இந்த மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் எதிரொலிக்கிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சிகளுக்கு 'மறைமுகத் தேர்தலோ' அல்லது 'நேரடித் தேர்தலோ' - எதையும் தீரத்துடன் சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story