பால் லாரி வேலை நிறுத்தம் வாபஸ் : கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆவின் அறிவிப்பு

சென்னையில் பால் விநியோகம் மேற்கொள்ளும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.
பால் லாரி வேலை நிறுத்தம் வாபஸ் : கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆவின் அறிவிப்பு
x
சென்னையில் பால் விநியோகம் மேற்கொள்ளும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் பால் வினியோகம் செய்யக்கூடிய லாரி உரிமையாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு அன்றாட கிடைக்க கூடிய பால் தடைபடும் சூழல் நிலவியது.இந்நிலையில் போராட்டக்காரர்களை அழைத்து ஆவின் நிர்வாக மேலாண் இயக்குனர் காமராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 127 லாரிகளில் ஆவின் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்