தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை : அறிவிப்பு வெளியிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறையில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.
தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை : அறிவிப்பு வெளியிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்
x
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறையில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. கடந்த 19ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு பிரதிக்‌ஷா என பெயரிடப்பட்டு அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த குழந்தை அல்லது குழந்தையின் பெற்றோர் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள், 21 நாட்களுக்குள், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு அல்லது திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் குழந்தையை சட்டப்படி தத்து கொடுக்க தடையில்லா சான்று வழங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்