தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு
x
தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி, கடந்த 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதகாவும், எனினும், டிசம்பர் 2வது வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி தீபக் குப்தா, டிசம்பர் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளார். இது குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்