"ஆண்டது போதுமென நினைத்த பிறகு, தம்பிகளுக்கு வழிவிடுங்கள்" - விஜய் அரசியல் நுழைவை மறைமுகமாக கூறிய எஸ்.ஏ.சந்திரசேகர்

ரஜினியும் கமலும் சேர்ந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது, தமிழர்களுக்கு நல்லது என நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஆண்டது போதுமென நினைத்த பிறகு, தம்பிகளுக்கு வழிவிடுங்கள் - விஜய் அரசியல் நுழைவை மறைமுகமாக கூறிய எஸ்.ஏ.சந்திரசேகர்
x
கமல் 60 நிகழ்ச்சியில் பேசிய அவர், சினிமாவின் இருப்பவர்கள் அரசியலுக்கு வர கூடாதெனறு சிலர் சொல்வதாகவும், ஆனால்  அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்  சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார். கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கி விட்டார்,இது சாதாரண விஷயம் இல்லை என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் குறிப்பிட்டார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கோடான கோடி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருப்பதாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், கமலும் ரஜினியும் சேர்ந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது தமிழர்களுக்கு நல்லது என்றார். அரசியலில் பின்னால் குத்துபவர்கள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், தங்கள் பின்னால் இருந்து தாம் பார்த்து கொள்ள போவதாக தெரிவித்தார். நீங்கள் இருவரும் ஆண்டது போதுமென நினைத்த பிறகு உங்கள் தம்பிகள் வந்தால் அவர்களுக்கு வழிவிட வேண்டும் என ரஜினி மற்றும் கமலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்தார்.   


Next Story

மேலும் செய்திகள்