அதிமுக பிரமுகர் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்.
அதிமுக பிரமுகர் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து
x
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். அதிமுக பிரமுகரான இவரது வீட்டின் பின்புறத்தில், தகர ஷீட் அமைத்து அதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் பின்புறத்தில் பயங்கர சத்தம் கேட்டதையடுத்து முத்துராமலிங்கம் அங்கே சென்று பார்த்துள்ளார். அப்போது, சிலிண்டர் வெடித்ததில் தகர மேற்கூரை தூக்கி வீசப்பட்டதுடன், கரும்புகையாக அப்பகுதி காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்