தனியார் வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் : பள்ளிக்கட்டிடத்தை புதுப்பித்து தர கிராம மக்கள் வேண்டுகோள்

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே பள்ளிக்கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் : பள்ளிக்கட்டிடத்தை புதுப்பித்து தர கிராம மக்கள் வேண்டுகோள்
x
ஏற்காட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாகலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கண்டியூர் கிராமம் . இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 180 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியின் கூரை, சேதமடைந்துள்ளதால், மழை தண்ணீர் ஆறு போல் கட்டிடத்திற்குள் ஓடுகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இத​னை சீரமைக்க கோரி பல முறை மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பள்ளியில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் சேதமடைந்த காரணத்தால் மாதம் 700 ரூபாய் வாடகை செலுத்தி, தனியார் கட்டிடத்தில் நடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குமுறுகின்றனர். பள்ளிக்கட்டிடம்,மற்றும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்