"மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை" - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மான்டிசோரி கல்விமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்ப்போம்
x
நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றைக் கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றக்கூடிய கல்வி மான்டிசோரி கல்வி முறை. 
இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மான்டிசோரி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கல்வி முறைக்கு உலகமெங்கு வரவேற்பும் ஆதரவும் பெருகி வருகிறது. பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் மான்டிசோரி கல்வி முறையை அளித்து வரும் நிலையில் அரசுப்பள்ளிகளுக்கு அது எட்டாக்கனியாக இருந்தது.  இந்த நிலையில் தான், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் மான்டிசோரி கல்வி முறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.  வண்ணமிகு வகுப்பறைகள், தரமான செய்முறை சாதனங்கள், நேர்த்தியான சீறுடை  என மாநகராட்சி பள்ளிகள் ஜொலிக்கின்றன. 
சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட 22 பள்ளிகளில், தனியார் அறக்கட்டளைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, இலவசமாக பயிற்றுவிக்கின்றனர். மான்டிசோரி கல்வி, எளிமையாக இருப்பதோடு குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதாக கூறுகின்றனர்  ஆசிரியர்கள்.
ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மான்டிசோரி கல்விமுறை, மாநகராட்சியின் முயற்சியால் தற்போது எட்டும் கனியாக மாறியிருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 
மான்டிசோரி கல்விமுறையின் குழந்தைகளிள் திறன் அதிகரித்து வருவதால், அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 
அரசின் இதுபோன்ற புதிய முயற்சிகளால், பொதுமக்களின் பார்வை, அரசு பள்ளிகளின் பக்கம் திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்